Sunday, July 12, 2009

நாட்டுச்சாலை

அன்பார்ந்த நாட்டுச்சாலை கிராம சகோதர சகோதரிகளே, நண்பர்களே, உறவினர்களே.
நமது நாட்டுச்சாலை கிராமம் பற்றி ஒரு இணைய தளம் விரைவில் திறக்க உள்ளோம்.
அதற்கு தங்களின் மேலான ஆதரவு எங்களுக்கு தேவை. நாங்கள் பொருளோ அல்லது பணமோ உதவியாக எதிர் பர்ர்க்கவில்லை. மாறாக தகவல்களை எதிர்பார்க்கிறோம்.
சில தகவல்கள் இங்கு திரட்டப்பட்டுள்ளன. இதில் தவறு ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டவும்.

தாங்கள் எளிதாக தகவல்களை தமிழில் பதிவு செய்ய

http://www.google.co.in/transliterate/indic/tamil

உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கருத்து எதிர் பார்க்கிறோம்

எதிர்பர்ர்புடன் கூடிய நன்றி


-------------------------------------------------------------
இவன் இணைய தயாரிப்பு மற்றும் மேலாண்மை குழு
நாட்டுச்சாலை இணைய குழு
மேலும் தொடர்பிற்கு +91-9884438410 or +91-44-45525325

-------------------------------------------------------------

நாட்டுச்சாலை.
தஞ்சை மாவட்டத்தில் வீற்றிருக்கும் அழகான கிராமம். நாட்டிற்கு சாலை எப்படி இருக்க வேண்டும் என்பவாறு பல சாலைகளை குறுக்கும் நெடுக்குமாக கொண்டது. சாலைகள் இருப்பது என்னவோ குறுக்கும் நெடுக்குமாக இருந்தாலும், இங்கு வாழ்ந்த, வழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களின் எண்ணங்கள், செயல்கள் என்றுமே நேர் வழியில் தான் அமைந்தன.

இதன் பலனாக இந்த அழகிய கிராமத்திற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நீங்கலாக, மற்றைய ஏனைய அனைத்து அரசு பயன்களும் கிடைக்கப்பெற்றனர் இக்கிராம மக்கள்.

விவசாயத்தை தாய் தொழிலாகவும், மற்றைய தொழில்களை தந்தை தொழிலாகவும் இங்குள்ள மக்கள் ஏற்று கொண்டனர். தேசம் கடந்த(அந்நிய) உழைப்பு இங்குள்ள மக்களின் முக்கிய ஆயுதமாக இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளில், குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, லண்டன், கனடா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், அரபு அமிரகம், கர்த்தார், போன்ற பல நாடுகளில் இக்கிராம மக்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

முக்கிய கோவில்கள்
ஸ்ரீ பெரமநாத அய்யனார் திருக்கோவில்(திங்கள் மற்றும் வெள்ளி சிறப்பு வழிபாட்டு நாட்கள்)
ஸ்ரீ சிவன் திருக்கோவில்(சிவன் கோவில்)
ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்
ஸ்ரீ இடும்பன் சுவாமி கோவில்(வடக்குதெரு)
ஸ்ரீ நல்லாயி அம்மன் கோவில்(நடுத்தெரு)
ஸ்ரீ சுந்தரி அம்மன் கோவில்(மேலத்தெரு)
ஸ்ரீ அம்மனியாயி கோவில்(தெற்குதெரு)
ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில்(ஹரிஜன தெரு)
ஸ்ரீ முனி அய்யா சுவாமி கோவில்(ஊர் எல்லை)

பள்ளிகள்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
அரசு மேல் நிலைப்பள்ளி
வெங்கடேஷ்வர வித்யா மந்திர்(ஆங்கில வழி கல்வி)

டீ கடைகள்
பெரியசாமி டீ கடை
நாகராஜன் டீ கடை(அருண்)
அனிஸ் டீ கடை
பக்கிரி மாஸ்டர் டீ கடை(வடிவேலு)
புலிக்குட்டி அண்ணன் வீட்டின் எதிரே உள்ள டீ கடை பெயர் மறந்து விட்டது, சரி செய்து அனுப்பவும்
அதே போன்று தேவர் டீ கடை பெயர் மறந்து விட்டது, சரி செய்து அனுப்பவும்.

நெல் அறவை இடங்கள்(மில்கள்)
காசிநாதன் மில்
கண்ணையன் மில்
சந்துரு மில்(ஆயில்)

தெருக்களின் பெயர்கள்
வடக்குதெரு
நடுத்தெரு
தெற்குதெரு
மேல தெரு
அம்பலக்காரதெரு
ஹரிஜன தெரு

ஊரில் இல்ல நாட்டாமைகள்

நாடிமுத்து - வடக்குதெரு(ஆண்டியாமூடு)
(ராஜா தந்தை)-வடக்குதெரு -தம்புரமூடு-பெயர் குறிப்பிடவும்

ஏ.பி. வீரமணி(மேல தெரு)- அம்பளையாம் வீடு

ம.ஆ.நாராயணன்(தெற்குதெரு)- மஞ்சவேளாம்வீடு
ரஜாமானிக்க வேளாளர்(தெற்குதெரு)-திருமையாம் வீடு

மற்றவர்கள்(நடுத்தெரு நாட்டாமைகள் பற்றிய விபரம் தெரியபடுத்தவும்)

ஊராட்சி மன்ற தலைவர் - நடராஜன் நல்லையன்(நடுத்தெரு)- நல்லம் வீடு
ஊராட்சி மன்ற துணை தலைவர் - ராஜேஷ்வரி பன்னிர்செல்வம் (வடக்குதெரு)- வேல்ராம் வீடு
ஊராட்சி ஒன்றிய தலைவர் - செம்மலிங்கம்(நடுத்தெரு)


பகுதி உறுப்பினர்கள்
பழனிவேலு - தெற்கு தெரு
மற்ற உறுப்பினர்கள் பற்றி தயவு செய்து தெரியபடுத்தவும்.

மருத்துவமனைகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
அரசு கால்நடை மருத்துவ மனை

வெங்கடேஷ்வர மருத்துவமனை(ஸ்ரீநிவாசன்) - தனியார்(சித்த மருத்துவம்)

நகை வடிவமைப்பாளர்கள்
பாரதி கடை(பத்தர் கடை)
சரவணன் கடை(ராஜேந்திர பத்தர் கடை)
மற்ற கடைகள் பற்றி தயவு செய்து தெரியபடுத்தவும்.

சிகை அலங்காரம்(முடி திருத்துதல்)
செல்வா கடை
சினுக்கு கடை
சுப்பிரமணியன் கடை
சூரியமூர்த்தி கடை
மற்ற கடைகள் பற்றி தயவு செய்து தெரியபடுத்தவும்.

பெட்டி கடைகள்
உதுமான் கடை
பாய் கடை
மற்ற பெட்டி கடைகள் பற்றி தயவு செய்து தெரியபடுத்தவும்.